search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் கொள்முதல்"

    மத்திய அரசின் புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. #CropProcurementPolicy
    புதுடெல்லி:

    விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 22 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதிய பயிர் கொள்முதல் கொள்கையை பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் வெளியிட்டார். அதில், நெல், கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 22 வகை விளைபொருட்களுக்கான உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை அனைவருக்கும் கிடைக்கும்.


    இந்த புதிய திட்டத்தினால், மத்திய அரசுக்கு ரூ.40000 கோடி கூடுதல் செலவாகும். வரும் காரிப் பருவ அறுவடைக் காலத்தில் இருந்து இந்த புதிய கொள்முதல் விலை அமலுக்கு வரும்.

    இதுதவிர பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, எத்தனால் விலை ரூ.47.50ல் இருந்து ரூ.52 ஆக உயரும். #CropProcurementPolicy #UnionCabinet
    ×